செல்ஃப் ஸ்டார்ட் எடுக்காத நிலையில் பேருந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இயக்கத்திலேயே இருந்ததால் உடை கற்களை வைத்து பேருந்து சக்கரங்களை தடுத்து நிறுத்திய போக்குவரத்து பணியாளர்கள்…

மதுரை மாவட்டம் சோழவந்தானில் கூட்டுறவு பயிர்கடன்கள் முழுவதையும் ரத்து செய்ய வலியுறுத்தி விவசாய சங்கங்கள் சார்பில் பஸ் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காலை 10 மணி அளவில் விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு திரண்டனர்.

அப்போது மறியல் செய்பவர்களை கைது செய்வதற்காக காவல்துறை மூலம் கொண்டுவரப்பட்ட அரசு பேருந்து ஆபத்தான நிலையில் பல்வேறு குறைபாடுகளுடன் வந்தது கண்டு மறியல் செய்ய வந்தவர்கள் மற்றும் அருகில் பேருந்து நிலையத்தில் காத்திருந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்

பத்து மணிக்கு கொண்டுவரப்பட்ட அரசு பேருந்து செல்ஃப் ஸ்டார்ட் மூலம் இயக்க முடியாது என்ற நிலையில் பேருந்து இயக்கத்திலேயே சுமார் 2 மணி நேரம் வைத்திருந்தனர். பேருந்து நகராமல் இருக்க பேருந்துலையே கொண்டுவரப்பட்ட இரண்டு
உடை கற்களை பேருந்து பணியாளர்கள் எடுத்து வந்து பேருந்து சக்கரத்தின் அடியில் பாதுகாப்புக்காக வைத்தது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மறியல் போராட்டத்தில் ஈடுபட வந்தவர்கள் மற்றும் அருகிலேயே ஜெனகை மாரியம்மன் கோவில் மற்றும் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில் இருந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது

போக்குவரத்து துறையில் தொடர்ந்து நடைபெறும் சீர்கேடுகளால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வரும் நிலையில் விவசாய சங்கங்கள் சார்பில் முக்கியமான போராட்டமான விவசாய பயிர் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்காக ஆபத்தான நிலையில் இருந்த அரசு பேருந்தை கொண்டு வந்து நிறுத்தியது பொதுமக்களின் உயிரை எந்த அளவுக்கு இந்த அரசு நினைக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இருப்பதாக அங்கிருந்த பொதுமக்கள் கூறினார்கள்.

மேலும், ஆபத்தான நிலையில் உள்ள பேருந்தில் எப்படி ஏறி செல்வது என மறியலில் ஈடுபட்டவர்கள் அச்சமடைந்ததாகவும் கூறப்படுகிறது ஒரு வழியாக அனைவரையும் பேருந்தில் ஏற்றி தனியார் மகாலுக்கு அழைத்துச் சென்றனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மறியலில் ஈடுபட்ட நிலையில் முன்னேற்பாடாக போதிய அளவு பேருந்துகளை ஏற்பாடு செய்யாத நிலையில் ஆட்டோக்கள் மற்றும் டாடா ஏசி வண்டிகளில் அழைத்துச் சென்றது மறியலில் ஈடுபட்ட விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளை சங்கடத்திற்கு உள்ளாக்கியது

இனி வரும் காலங்களில் ஆவது இது போன்ற நிகழ்ச்சிகளில் போதிய முன்னேற்பாடுகளுடன் அதிகாரிகள் செயல்பட வேண்டுமென அங்கிருந்த பொதுமக்கள் கூறி சென்றனர்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed