ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மடவார் வளாகம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இங்கு வைத்தியநாதசுவாமி கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த திருக்கோவிலில் நல்ல மழை வளம் வேண்டி கோயில் சித்திர சபையில் வைத்து உற்சவ மூர்த்திகளான வைத்தியநாதர் சிவகாமி அம்பாளுக்கு யாகசாலை அமைத்து கும்பம் வைத்து சிறப்பு யாகம் நடைபெற்றது.

கோவில் சிவாச்சாரியார்கள் சைவ ஆகம முறைப்படி பூஜைகளை செய்து வைத்தனர். தொடர்ந்து கோவில் அருகே உள்ள சிவகங்கை தீர்த்தத்திலும் வருண ஜெபம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர், கோ.தேவி மற்றும் கோயில் அலுவலர்களும் திருக்கோவில் பணியாளர்களும் சிறப்பாக செய்து இருந்தனர்.

செய்திகள் : தேவதர்ஷினி / எதிரொலி . இன் / 8939476777
