திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வருகின்ற அக்டோபர் 24 ம் தேதி மீஞ்சூர் பேரூராட்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி பிரபாகர் கலந்து கொண்டு 1,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.

அந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவை முன்னிட்டும், அவ்விழாவில் பொன்னேரி தொகுதி முழுவதும் உள்ள கட்சியினர் பரிந்துரையின் பேரில், பயனாளிகளை தேர்வு செய்வது குறித்தும், இந்த நிகழ்ச்சியின் மற்ற முன்னேற்பாடு பணிகள் குறித்தும் கட்சியினர் கலந்து கூடிய ஆலோசனை கூட்டம் பழவேற்காட்டில் உள்ள தனி யார் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மீஞ்சூர் வெற்றிமாறன் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். இந்த கூட்டத்தில் S.ராஜகுமார், விஜயகுமார், S.சாகில்,M.மாறன்,M.அஜித் குமார்,கார்த்திக், மணி,E.அஜித், சுரேஷ்,ராஜா,விஜயன், தேவா,V.கார்த்தி,ராமு,லோகேஷ்,E.அஜித்,மதுரைராஜ்,பிரசாந்த்,குமார் உள்ளிட்ட ஏராளமான தவெக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்திகள் : பழவை முத்து / எதிரொலி . இன் / 8939476777
