தமிழக வெற்றி கழகம் ஆட்சி கைப்பற்றிய பிறகு முதல் முறையாக முதலமைச்சராக பதவி ஏற்று மதுரை மாநகர் வரக்கூடிய தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் இன்று திட்டத்தை துவங்கி வைக்க உள்ளார்.

இந்த நிலையில் மதுரை மாநகர் முழுவதும் மதுரை மாவட்ட திரிஷா நற்பணி மன்றம் சார்பாக தமிழகத்தில் பிறக்கும் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் திட்டத்தில் தன்னையே தாய் மாமனாக என்று கூறி திரு ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் திரிஷா நற்பணி மன்றத்தினர் மதுரை மாநகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

மேலும், முதலமைச்சர் வரும் பகுதிகளில் எந்தவிதமான போஸ்டர்கள் ஒட்டக்கூடாது என உத்தரவிட்டதால் முதல்வர் வரும் பகுதிகளில் போஸ்டர்கள் அனைத்தும் கிழிக்கப்பட்டுள்ளது. கட்சி பாகுபாடு இன்றி அனைத்து போஸ்டலும் கிழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி. இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed