நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வருவாய்த்துறையினர் அதிரடி நடவடிக்கை…

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கரடிக்கல் கிராமத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எதிரே பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த 5.5 ஏக்கர் அரசு ஊரணி புறம்போக்கு நிலம் இன்று மீட்கப்பட்டு ஊராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருமங்கலம் அடுத்த தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை எதிரே கரடிக்கல் கிராமத்தில் கிராம கணக்கில் அரசு புறம்போக்கு ஊரணி என பதிவாகி உள்ளது. இந்த இடத்தை தனிநபர் ஆக்கிரமித்து வெண்டை, மா, பப்பாளி மரங்களை நட்டு அனுபவித்து Efforts புகார் எழுந்தது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டதை தொடர்ந்து, மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் திருமங்கலம் வட்டாட்சியர் முத்துலட்சுமி தலைமையில் மண்டல துணை வட்டாட்சியர் வீரக்குமார், வருவாய் ஆய்வாளர் தனசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கபாண்டியன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், ஆஸ்டின்பட்டி போலீசார் இணைந்து ஆக்கிரமிப்பை அகற்றி நிலத்தை மீட்டு கரடிக்கல் ஊராட்சியிடம் ஒப்படைத்தனர்.

வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் மீனாள் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறும் போது :

சொந்த ஊர் கரடிக்கல். இங்கு a2-ல் உள்ள ஊரணி புறம்போக்கை தனிநபர் போலி ஆவணங்களை தயாரித்து அபகரித்தார். பஞ்சாயத்து தலைவரின் கையெழுத்தை போட்டு போலி தீர்மானம் நிறைவேற்றி அதை நீதிமன்றத்திலும், மாவட்ட ஆட்சியரிடமும் தாக்கல் செய்துள்ளார்.
மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் உயர்நீதிமன்றத்தில் ரிட் தாக்கல் செய்து. அது அனுமதிக்கப்பட்டு, அவர்கள் போட்ட மறு சீராய்வு மனு தள்ளுபடியானது. தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் போட்டுள்ளேன்.

இந்த 5.5ஏக்கர் நிலத்தில் ஒரு சென்ட் விலை ஒரு கோடி, மொத்தம் 600 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரித்திருந்தார். இன்று மாவட்ட ஆட்சியரின் முயற்சியால் நீதிமன்ற உத்தரவின் பேரில் நல்ல முறையில் மீட்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed