விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சத்திரப்பட்டியில் செயல்படும் தனியார் தன்னார்வ தொண்டு அமைப்பு சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளை வட்டாட்சியர் ராஜீவ்காந்தி. போக்குவரத்து காவல் ஆய்வாளர் விஜயகாந்த் மற்றும் தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

10 கிமீ தூரம் நடைபெற்ற ஓப்பன் பிரிவில் 200 போட்டியாளர்களும், 5 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற போட்டியில் 450 மாணவ, மாணவிகளும், மூன்று கிலோமீட்டர் தூரம் வரை நடைபெற்ற போட்டியில் 70 பெண்களும் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் 85 வயதை கடந்த சிவகாசியை சேர்ந்த ராஜேந்திரன் என்ற முதியவர் இளைஞர்களுக்கு இணையாக போட்டியின் மொத்த தூரத்தையும் கடந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு சிறப்பு பரிசுகள், தொடர்ந்து வந்த 30 போட்டியாளர்களுக்கு ஆறுதல் பரிசு என மொத்தம் ரூ. 2 லட்சம் மதிப்பில் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

செய்திகள் : ராதாகிருஷ்ணன் / எதிரொலி . இன் / 8939476777
