மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் வாடிப்பட்டி வட்டாரம் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது தென்கரையில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்ற இந்த முகாமில் அலிம்கோ நிறுவனத்துடன் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்கள் வழங்குவதற்கான அளவீடு செய்யப்பட்டது.
முகாமை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் தொடங்கி வைத்தார் முகாமில் 132 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர் அதனை தொடர்ந்து ரியாக்ட் என் ஜி ஓ உடன் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி லோன் வழங்கும் முகாம் உள்ளிட்டவைகள் நடைபெற்றது வாடிப்பட்டியில் உள்ளஜே பி சி எக்ஸ்போர்ட் ஜவுளி பூங்கா மனித வள அலுவலர் சிவானந்தம் கலந்து கொண்டு தகுதியான மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்தனர் இதில் 30 க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

முகாம் ஏற்பாடுகளை தமிழ்நாடு உரிமைகள் திட்டம் வாடிப்பட்டி வட்டாரத்தின் ஒருங்கிணைப்பாளர் சங்கர் செய்திருந்தார்.
செய்திகள் ; காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777
