ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், போதிய மழையின்மை காரணத்தால், கொளுத்தும் வெயில் இவை போன்ற காரணங்களால் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் உள்ள பெரும்பான்மையான கண்மாய்கள் மற்றும் குளங்கள் வறண்டு போய் உள்ளன வானிலை மாற்றம் காரணமாக கடந்த வாரங்களில் ஓரளவு மழை பெய்தாலும் அந்த மழை நகரை குளிர்விக்க மட்டுமே பயன்பெறும் வகையில் இருந்தது.
ஆனால் எந்த ஒருகுளமோ, கண்மாயோ நிறையவே இல்லை. இந்த சூழ்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலுக்கு சொந்தமான சக்கரை குளம் குளம் பல வருடங்களுக்கு பிறகு முழுமையாக தண்ணீர் என்று வறண்டு போய் உள்ளது. வரண்டு போய் உள்ள அந்த குளத்தை இளைஞர்கள் சிலர் விளையாட்டு மைதானமாக மாற்றி உள்ளனர். குளத்தை சுத்தப்படுத்தி நீர் இல்லாத இந்த குளத்தை விளையாட்டு மைதானமாக மாற்றி விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் ; தேவதர்ஷினி / எதிரொலி . இன் / 8939476777
