கோவை நவஇந்தியா பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட தினம் ஆவாரம்பாளையத்தில் கொண்டாடப்பட்டது.
நிகழ்விற்கு , கல்லூரி முதல்வர் - செயலர், முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமதாங்கினார். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி கிரியபனவர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஆவாரம்பாளையத்தில் டெங்குக் காய்ச்சல் அதிகம் பரவியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து , தியாகம், அன்பு, அக்கறை, சேவை, அர்ப்பணிப்பு, சகிப்புத்தன்மை, மனிதநேயம் போன்ற ஒப்பற்ற குணநலன்களோடு சமூகத்திற்கு சுயநலமற்ற சேவையாற்றுவோம் என்று நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

நிகழ்வில் , நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் எஸ்.பிரகதீஷ்வரன், பேரா. பி.கீர்த்திவாசன், முனைவர் ஏ.சஹானா ஃபாத்திமா, பேராசிரியர்கள் ஆர்.சூர்யா, எல்.பாலுசாமி, 250க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாமுஜெயக்குமார்.
சிறப்பு செய்தியாளர்.
