தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்கவும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், சனிக்கிழமை விடுமுறை விடவும், அடிப்படை ஊதியம் மாதம் ரூபாய் 18,000 என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவும், குழந்தைகளின் உணவு செலவினத் தொகையை மாதா மாதம் முறையாக வழங்கவும் உள்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம் முன்பு சி ஐ டி யூ அங்கன்வாடி ஊழியர்கள் மாநில செயற்குழு உறுப்பினர் விமலா ராணி தலைமையில் செயலாளர் கவிதா, பொருளாளர் சத்யா ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியூ மாவட்ட தலைவர் மகாலட்சுமி, விசைத்தறி தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஆர். சோமசுந்தரம், ராஜபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் சுப்பிரமணியம் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்கள்.

ஏராளமான அங்கன்வாடி ஊழியர்கள் இதில் கலந்துகொண்டு கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

செய்திகள் : ராதாகிருஷ்ணன் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed