மாண்புமிகு தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பெ.விஸ்வநாதன் அவர்கள், மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா IAS அவர்களின் தலைமையில், மேலூர் நகராட்சிக்குட்பட்ட
வார்டு எண் 04 – வெள்ளநாதன்பட்டி,
வார்டு எண் 23 – தினசரி சந்தை சாலை,
வார்டு எண் 06 – அண்ணா காலனி,
வார்டு எண் 21 – மலம்பட்டி,
வார்டு எண் 27 – கலைஞர் நகர்
ஆகிய பகுதிகளில், மாநில நிதிக்குழு மானியம் – (இயக்குதல் மற்றும் பராமரிப்பு உட்கட்டமைப்பு) 2025–26 திட்டத்தின் கீழ், தலா ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 05 நவீன அங்கன்வாடி மையக் கட்டிடங்களை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

மொத்தம் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இம்மையங்கள், நமது குழந்தைகளுக்கு பாதுகாப்பான, சுகாதாரமான மற்றும் தரமான முன்பருவக் கல்வி மற்றும் ஊட்டச்சத்து சேவைகள் கிடைப்பதற்கு உறுதுணையாக அமையும். குழந்தைகளின் கல்வி, ஊட்டச்சத்து மற்றும் அடிப்படை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களின் எதிர்காலத்தை வளமானதாக மாற்றுவதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

மேலூர் நகராட்சிப் பகுதிகளில் மக்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து, தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து மேம்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. இந்நிகழ்ச்சியில், நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், அலுவலர்கள், பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். குழந்தைகளின் நலனே – நாட்டின் வளமான எதிர்காலத்திற்கான அடித்தளம்!
செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777
