மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி ஏழாவது வார்டு முதலியார கோட்டை நடுத்தெருவில் கழிவுநீர் கால்வாய் காக தோண்டிய பள்ளத்தை ஒரு மாதத்திற்கு மேலாக சீரமைக்க வில்லை என கூறப்படுகிறது இது குறித்து பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஏழாவது வார்டு தமிழக வெற்றி கழக நிர்வாகி மருது என்பவர் சீரமைக்கப்படாத கழிவுநீர் கால்வாயை தனது சொந்த செலவில் சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டார்.

பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் சோழவந்தான் பகுதிக்கு செல்ல முடியாத நிலையில் சேதம் அடைந்த நிலையில் இருந்த கழிவு நீர் கால்வாயை சீரமைத்த தமிழக வெற்றி கழக நிர்வாகி மருதுக்கு வார்டு பொதுமக்கள் பகுதியை சேர்ந்தவர்கள் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தனர் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தானே முன்வந்து தனது சொந்த செலவில் கால்வாயை சீரமைத்ததாக கூறினார்.

அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அதிகாரிகள் செயல்படுவதாக கூறிய மருது இனிமேலாவது பொதுமக்களின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed