மதுரை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் மற்றும் வணிகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று மனு கொடுத்தனர்.

அதில், தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் மற்றும் வணிகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ( FOMTA ) கடந்த 1999-ஆம் வருடத்திலிருந்து மதுரையில் வணிகர்களின் பொதுநல நோக்கத்திற்காக இயங்கி வருகிறது என்றும் இந்த கூட்டமைப்பில் பல்வேறு துறை வணிகர்கள் சங்கங்கள் இணைந்து செயல்பட்டுக்கொண்டு வருகின்றது என்றும், இத்த அமைப்பின் நோக்கம் மத்திய, மாநில அரசுகளுடன் இணக்கமாக செயல்பட்டு வணிகர்களுக்கு வணிகரீதியில் ஏற்படக்கூடிய சிரமங்களை அரசு கவனத்திற்கு எடுத்துச்சென்று குறைகளை நிவர்த்தி செய்வதும், மேலும் வணிகர்களுக்கு ஏற்படக்கூடிய பலவித சிரமங்களை ஒற்றுமையுடன் சீர்செய்து தருவதே முக்கிய கடமையாக கொண்டுள்ளது.

அதோடு மிகச் சிறிய சிறு, குறு தொழில் செய்வோரும். மொத்த வணிகர்களும் உறுப்பினர்களாக இருந்து செயல்பட்டு வருகின்றனர். மத்திய, மாநில அரசுகளின் SGST & CGST Redressal Committee-ல் உறுப்பினராக அங்கீகரிக்கப்பட்டு அந்த அலுவலகங்களில் இருந்து வரக்கூடிய அனைத்து, மாதாந்திர, வருடாந்திர கூட்டங்களில் கலந்து கொண்டு GST சம்பந்தப்பட்ட நிறை குறைகளை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து வணிகர்களுடைய கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பல முக்கியமான கோரிக்கைகள் வணிகர்களுக்கு சாதகமாக உயர் அதிகாரிகளால் உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு வரும் அக்டோபர் 15ந்தேதி முதல் UPI மூலமாக பணப்பரிவர்த்தனை செய்யக்கூடிய வகைகளுக்கு ரூ. 2000-க்கு மேல் செய்யக்கூடிய பரிவர்த்தனை தொகைக்கு அது சாதாரண நுகர்வோர்கள் செலுத்தும் தொகையாக இருந்தாலும், அல்லது வணிகர்கள் வணிகர்கள் பரிவர்த்தனை செய்து கொண்டாலும் தொகை யாருடைய கணக்கில் செலுத்தப்படுகிறதோ அந்த வணிகர் கணக்கில் செலுத்தப்பட்ட தொகைக்கு 0.4% கட்டணமாக வங்கி பிடித்தம் செய்து கணக்கில் பற்று செய்யப்படும் என்ற புதிய நடைமுறையினை அமல்படுத்தவுள்ளது.

தொடர்ந்து ஒரு வருட பரிவர்த்தனைகளை கணக்கீடு செய்து பார்க்கும்போது ஏற்கனவே பல சிரமங்களுக்கு இடையில் விளைவாசியின் உச்சபட்ச மதிப்பீடும். போட்டி வணிகம், உச்சபட்ச வேலையாட்களின் சம்பளம், வாடகை, மின் கட்டணம். கார்ப்பரேஷன் அலுவலகங்களுக்கு செலுத்தக்கூடிய வரி வகையறாக்கள் செலுத்தியும் எதிர்பாராத மாற்றங்கள் போன்றவற்றையெல்லாம் மீறி ஒரு வணிகர் லாபம் ஈட்டுவதன்பது மிக சிரமப்பரிகாரமான சூழ்நிலையாகும்.

ஒட்டுமொத்த UPI பரிவர்த்தனைகளின் கட்டண கணக்கீடு இந்தியாவின் ஒட்டுமொத்த வணிகர்களின் முதுகெலும்பில் அதிக பாரம் சுமத்தும் சூழ்நிலையாக இருக்கும். அனைத்து வணிகர்களும் நலமுடனும், பொருளாதார வலுவுடனும் வணிகம் செய்து வர அரசு UPI பரிவர்த்தனைக்கான கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

இந்த UPI பரிவர்த்தனை கட்டணத்தை தாங்கள் இரத்து செய்யாத சூழ்நிலை ஏற்படும் எனில், மீண்டும் அனைத்து பொதுமக்களும், வணிகர்களும் பணப்பரிவர்த்தனை மூலமாகவே தங்களுடைய வணிகத்தை நடத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கும். உதாரணக் கணக்கீடாக எங்களிடம் தொடர்ந்து வணிகம் செய்யும் ஒரு பயனாளர் சில இலட்சங்கள் நிலுவை வைத்து பகுதி பகுதியாக எங்கள் பாக்கித் தொகையை செலுத்தும்போது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ. 300/- கட்டணமாக செலுத்தும் நிலை உருவாகும் பட்சத்தில் மொத்த பாக்கியை அவர் 5 தவணைகளாக செலுத்தும் பட்சத்தில் எங்கள் வணிக லாபத்தில் இருந்து ரூ.1500/-செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடுகிறது.

அனைவரின் நலன் கருதி இந்த கட்டணத்திட்டத்தை முற்றிலுமாக ரத்து செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம் என்றும், வணிகர்களாகிய நாங்கள் எந்த வகையிலும் முடங்கிவிடாமல் அரசு எங்களை பாதுகாக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என கூறியுள்ளனர்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed