ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம் மாவட்ட துணை ஆட்சியர் முகமது இர்ஃபான் தலைமையில் மருத்துவத்துறை இணை இயக்குனர் விமலா ராஜன் இணையகுமார் பொறுப்பு டாக்டர் காளி ராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
நோயாளிகள் நல சங்க உறுப்பினர்கள் மற்றும் மருத்துவப் பயனாளிகளின் கூட்டத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் பராமரிப்பு மருத்துவ சேவை உள்கட்டமைப்பு மேம்படுத்துதல் மகப்பேறு குழந்தைகள் நலப் பிரிவில் லிப்ட் வசதி தூய்மை நோயாளிகளின் பாதுகாப்பு தரம் மேம்படுத்துதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இறுதியில், துணை ஆட்சியர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை குறித்து கருத்துக்களை பரிமாறி ஆலோசனைகள் வழங்கி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார்.
கூட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையாளர் குமார் அரசு மருத்துவமனை டாக்டர் குமரகுரு செவிலியர் புவனேஸ்வரி அலமேலு மங்கையை மூத்த ஆய்வக பொறுப்பாளர் கிருஷ்ணா தேவி உதவி செயற்பொறியாளர் ஸ்ரீபா ரோஸ் மின்வாரிய இளம் பொறியாளர் ராம்குமார் பாலசுந்தரம் இளநிலை நிர்வாக அலுவலக கண்காணிப்பாளர் ஜெய் கணேஷ் தலைமை மருந்தாளுனர் முத்துக்குமார் தன் ஆர்வலர் ஜெசிகா ஏஞ்சல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்திகள் ; தேவதர்ஷினி / எதிரொலி / 8939476777
