மதுரை மாவட்டம் பரவை அருகே உள்ள சத்தியமூர்த்தி நகர் பகுதியில் ரயில்வேகேட் செயல்பட்டு வருகிறது. இதனை கடந்து சமயநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று காலை 9 மணி முதல் ரயில்வே கேட் பழுதாகி செயல்படாததால் கேட்டை அதன் ஊழியர் திறக்க முடியாமல் அவதியுற்று மேலதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ஊழியர்கள் ரயில்வே கேட்டை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர் ரயில்வே கேட் பழுதால் வாகன ஓட்டிகள் வெகு நேரம் கேட்டை கடந்து செல்ல முடியாமல் தவித்தனர், குழந்தைகள், பெண்கள் நடந்து சென்று கேட்டை கடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டது.

அப்போது அவசர சகிச்சை பெற 108 ஆம்புலன்ஸ் மூலம் நோயாளி ஒருவர் வந்தபோது 108 ஆம்புலன்சும் கேட்டை கடக்க முடியாமல் அங்கேயே வெகுநேரமாக காத்திருந்தனர், பின்னர் நோயாளியை நடக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமண நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டியவர்கள் பேருந்தில் அமர்ந்து காத்திருந்த நிலையில் ரயில்வே கேட்பதால் திருமணத்திற்கு செல்ல முடியாத நிலையில் ஏற்பட்டது அடிக்கடி பழுதாகும் இந்த ரயில்வே கேட்டை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

செய்திகள் ; காளமேகம் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed