தேசிய வாய்ச் சுகாதார தினத்தை முன்னிட்டு, போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் சென்னை மண்டலம், இந்திய பல் மருத்துவ சங்கம் – தமிழ்நாடு மாநிலக் கிளை உடன் இணைந்து தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தி வரும் இலவச பல் பரிசோதனை , வாய்ச் சுகாதார விழிப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக, கோயம்புத்தூர் கீதாஞ்சலி பப்ளிக் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான இலவச பல் பரிசோதனை வாய்ச் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


நிகழ்வில் , ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி , மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஜெ. தினகர் , இந்திய பல் மருத்துவ சங்கம், கோயம்புத்தூர் கிளையைச் சேர்ந்த டாக்டர் ஜி. பி. சுரேந்திரன், டாக்டர் ஆர் . பாபு , கீதாஞ்சலி பள்ளி தலைவர் எம் .அழகிரிசாமி , பள்ளி முதல்வர் எஸ் .ஜீ . கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பள்ளி மாணவர்களின் வாய்ச் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், விரிவான பல் பரிசோதனை, வாய்ச் சுகாதார விழிப்புணர்வு, பல் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல் , தொடர் சிகிச்சை தேவைப்படும் மாணவர்களை உரிய சிகிச்சைக்கு பரிந்துரைத்தல் ஆகியவை இந்நிகழ்வின் முக்கிய நோக்கங்களாக இருந்தன.

இஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி , மருத்துவமனையைச் சேர்ந்த பல் மருத்துவக் குழுவினர் மாணவர்களுக்கு பல் பரிசோதனை மேற்கொண்டதுடன், முறையான வாய்ச் சுகாதாரப் பழக்கவழக்கங்கள் , வழக்கமான பல் பரிசோதனையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், தொடர் சிகிச்சை தேவைப்படும் மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு, உரிய சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.

பள்ளிகள், அரசு அமைப்புகள் , பல் மருத்துவத் துறையினரின் ஒருங்கிணைந்த முயற்சியாக நடைபெறும் இத்திட்டம், பள்ளி மாணவர்களிடையே தடுப்பு அடிப்படையிலான வாய்ச் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும், சிறு வயதிலிருந்தே நல்ல வாய்ச் சுகாதாரப் பழக்கங்களை உருவாக்குவதற்கும் முக்கிய பங்காற்றுகிறது. மாணவர்களின் சிறந்த வாய்ச் சுகாதாரத்திற்காக வழக்கமான பல் பரிசோதனை, நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல் , உரிய நேரத்தில் சிகிச்சை பெறுதல் ஆகியவற்றின் அவசியத்தையும் இந்நிகழ்வு வலியுறுத்தியது.

மாமுஜெயக்குமார்.
சிறப்பு செய்தியாளர் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed