திருவள்ளூர் மாவட்டம் பூண்டி பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்டு மோவூர் ஊராட்சி உள்ளது. சிற்றுராட்சியான இந்த மோவூர் ஊராட்சியில் மோவூர் மற்றும் கன்னியம்மன் பேட்டை ஆகிய இரண்டு கிராமங்கள் மட்டுமே உள்ளன…

இந்நிலையில், கன்னி அம்மன் பேட்டையில் உள்ள கிராம மக்கள் வாழும் தெருக்களில் மழை நீர் தேங்கி நிற்காமல் இருப்பதற்காக வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த கால்வாய்கள் அமைத்து பல வருடங்கள் ஆகிவிட்ட சூழ்நிலையில் அந்த கால்வாய்கள் முழுவதும் மண் நிரம்பி அடைப்புகள் ஏற்பட்டுள்ளது. மழைக்காலத்திற்கு முன்பாக இந்த கால்வாய்களை தூர்வாரப்படாமல் கிடந்ததால், தற்போது பெய்த கனமழையில் விநாயகர் கோயில் தெருவில் உள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு மழை நீர் வடிய முடியாமல் தேங்கி நிற்கின்றது.

அதனால், விநாயகர் கோயில் தெருவில் உள்ள மக்கள் மட்டும் இல்லாமல் அந்த தெருவின் வழியாக செல்லக்கூடிய மற்ற மக்களும் மிகவும் சிறந்து உள்ளாகி வருகின்றனர். மழை நின்று விட்டு போதிலும் அந்த நீர் முழுவதுமாக படியாததால் அப்பகுதியில் தொற்று நோய் வரவும் அபாயமும் உள்ளது.

அது மட்டும் இல்லாமல் மீண்டும் அடுத்த மழை பெய்தால் இந்த இடத்தில் மீண்டும் மழை நீர் தேங்கி நிற்காமல் இருக்க ஊராட்சி நிர்வாகம் உடனடியாக அந்த கால்வாய்களை தூர்வாரி கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்க வைக்கின்றனர்.

வாசகர் குரல் : எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed