சென்னை புனித ஜார்ஜ் கோட்டை
( Samgra Shiksha Abhiyan) ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியில் பணியாற்றும் தொகுப்பூதிய அலுவலக ஊழியர்களின் சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது,

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி தொகுப்பூதிய அலுவலக ஊழியர்கள் சுமார் 10 முதல் 30 ஆண்டுகளாக பள்ளிக் கல்வி துறையில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது புதியதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு 5 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என தேர்தல் வாக்குறுதில் தெரிவித்த நிலையில் அதற்காக தமிழகம் முழுவதும் 1300 ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தொகுப்பூதிய அலுவலக ஊழியர்கள் ஆவலுடன் தமிழக முதல்வர் அறிவிப்பிற்காக காத்துள்ளனர்.

தவெக அரசின் தேர்தல் வாக்குறுதிப்படி பணி நிரந்தரம் செய்வதற்கு முன்னர் தொகுப்பூதிய ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க 2014இல் ( pay fixation ) செய்தது போல் குறைந்தபட்ச ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.30 ஆயிரம் ஊதிய மறு நிர்ணயம் செய்யவேண்டும். இ.எஸ்.ஐ. மற்றும் குடும்பநல பாதுகாப்புப்நிதி, ஓய்வூதியம் காலிப்பணியிடங்களில் விருப்பப்பணி மாறுதல் வழங்கி காலிபணியிடங்களை நிரப்புதல், தொகுப்பூதிய பணியாளர்களுக்கு உடல்நிலை சரியில்லாத பொழுது மருத்துவ ஆவணங்களின் அடிப்படையில் மருத்துவ விடுப்பு வழங்க கோருதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றி வேண்டும்!!

இது தொடர்பாக பள்ளி கல்வி துறை சார்ந்த உயர் அதிகாரிகளை பல முறை சந்தித்து கோரிக்கை அளித்துள்ளோம். 09.09.2026 ராஜா ரத்தினம் விளையாட்டு மைதானம் அருகில் சுமார் ஆயிரம் பணியாளர்கள் உண்ணாவிரதம் இருந்து அரசின் கவனத்திற்கு எங்களது கோரிக்கைகளை எடுத்துச் சென்றோம், மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களிடமும் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை ஆகையால் இன்று 29.10.2026 பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவளிடமும், முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் எங்களது கோரிக்கையை நிறைவேற்றி எங்களது ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி நினைவூட்டல் மனு வழங்கப்பட்டது என்று தெரிவித்தனர்.

இச்சந்திப்பில், தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து ஊழியர் சங்கம்( தொகுப்பூதிய அலுவலக பணியாளர்கள் )
மாநில தலைவர் பு..இதயவேந்தன், சங்க நிர்வாகிகள் காஜா மொய்தீன் கலந்து கொண்டார்கள்.

செய்திகள் நாகை, மணிவண்ணன் எதிரொலி. இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed