பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் 119-வது பிறந்தநாள் விழா , 64-வது குருபூஜை விழாவினையொட்டி, தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு எரிசக்தி , சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் , தமிழ்நாடு குறு, சிறு , நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெமதன் ராஜா , தமிழ்நாடு சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.வே.க.ராஜீவ் ஆகியோர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்கள்.

  
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன்னில் , பசும்பொன் முத்துராமலிங்கதேவர் திருமகனாரின் 119-வது பிறந்தநாள் விழா , 64-வது குருபூஜை விழாவையொட்டி, தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு எரிசக்தி , சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் , தமிழ்நாடு குறு, சிறு , நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன் ராஜா , தமிழ்நாடு சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.வே.க.ராஜீவ் , மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கபாண்டி (மதுரை மேற்கு), எம்.எம்.கோபிசன் (மதுரை தெற்கு), எம்.வி. கருப்பையா (சோழவந்தான்). .ஏ.குழந்தைராணி நாச்சியார் (சிவகங்கை), டி. இளங்கோவன் (மானாமதுரை), ஆர்.சீனிவாசசேதுபதி (திருப்பத்தூர்) ஆகியோர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தொடர்ந்து, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கலையரங்கத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் பெருமக்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து, வருவாய் , பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் 26 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா ரூ.26,00,000/- இலட்சம் மதிப்பீட்டிலும், 05 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாறுதல்களும், 84 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளும், 10 பயனாளிகளுக்கு உழவர் அட்டைகளும், 03 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை ரூ.30,000/- மதிப்பீட்டிலும், 03 பயனாளிகளுக்கு இறப்பு நிவாரணம் ரூ.60,000/- மதிப்பீட்டிலும், மகளிர் மேம்பாட்டுத் திட்டம் மூலம் 05 பயனாளிகளுக்கு மகளிர் சுயஉதவிக்குழுக் கடன் ரூ.2,00,000/-இலட்சம் மதிப்பீட்டிலும், வேளாண்மைத்துறையின் மூலம் 05 பயனாளிகளுக்கு தெளிப்பு நீர் பாசனம் ரூ.85,833/- மதிப்பீட்டிலும், 05 பயனாளிகளுக்கு மழை தூதுவான் ரூ.1,94,217/- இலட்சம் மதிப்பீட்டிலும், கூட்டுறவுத் துறையின் மூலம் 48 பயனாளிகளுக்கு மகளிர் சுய உதவிக்குழு கடன் திட்ட உதவி ரூ.48,00,000/- இவட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 194 பயனாளிகளுக்கு ரூ.79,70,050/-இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு எரிசக்தி , சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் , தமிழ்நாடு குறு, சிறு , நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன் ராஜா, தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.வே.க.ராஜீவ் ஆகியோர் வழங்கினார்கள்.


முன்னதாக, நிகழ்ச்சியை செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சி.சாலி தளபதி திறம்பட தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் , மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கபாண்டி (மதுரை மேற்கு), எம்.எம்.கோபிசன் (மதுரை தெற்கு), எம்.வி. கருப்பையா (சோழவந்தான்), ர.குழந்தைராணி நாச்சியார் (சிவகங்கை), டி. இளங்கோவன் (மானாமதுரை), ஆர்.சீனிவாசசேதுபதி (திருப்பத்தூர்), மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் , வளர்ச்சி கூடுதல் ஆட்சியர் திவ்யான்ஷீநிகம், பரமக்குடி சார் ஆட்சியர் மரு.ச.வினோதினி உள்பட அரசு அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

w

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed