கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு. துரிதப்படுத்தும். ஆலோசனை கட்டும் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
இந்தியாவின் 16-வது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் வீடு பட்டியலிடும் பணிகள் 2026-ம் ஆண்டு முதல் தொடங்குகின்றன. இம்முறை முதல் முறையாக முழுமையாகத் டிஜிட்டல் முறையில் செயலி மற்றும் இணையதளம் மூலமாகச் சுய கணக்கெடுப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி வட்டார பகுதியில் உள்ள மொத்த வீடுகளின் எண்ணிக்கை 65,994 உள்ளது எனவும், அதில் இதுவரை 24,469 வீடுகளில் மட்டுமே கணக்கெடுத்துள்ளதாகவும் தெரியவந்தது. ஆகவே, மீதமுள்ள 41,525 வீடுகளில் கணக்கெடுக்கும் வேலையை துரிதப்படுத்த வேண்டுமென அதிகாரிகளுக்கு வட்டாட்சியர் அறிவுறுத்தினர்.

அதனை தொடர்ந்து, வீடுகளில் கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ளும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கணக்கெடுக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்பதற்காக, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் பாலாஜி அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில், இதுவரை கணக்கெடுக்கப்பட்ட விவரங்களை ஆய்வு செய்தார். பின்னர், கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள மொத்த வீடுகளிலும் கணக்கெடுக்கும் பணியை உடனடியாக முடித்து கொடுக்க வேண்டும் என வட்டாட்சியர் அறிவுறுத்தினார். மேலும், சாதிவாரி விவர சேகரிப்பு பணிகளையும் விரைந்து முடித்து கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

செய்திகள் ; S.E. யாகோப் / எதிரொலி / 8939476777

