கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வினாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விதவிதமான வினாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம். சுற்றுச் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலம் வினாயகர் சிலை செய்யப்படுவதல் மண்பாண்ட தொழிலாளிகளின் வாழ்வதாரம் பாதிக்கப்படுவதாக தொழிலாளிகள் வேதனை.
கிருஷ்ணகிரி மாவட்டமானது கர்நாடக மற்றும் ஆந்திரா மாநில எல்லையில் அமைந்துள்ளதால், இப்பகுதியில் ஆண்டுதோறும் விநாயகர் சதூர்த்தி வெகு விமர்ச்சியாக கொண்டாடப்பட்டு வருவதால், மக்கள் விநாயகர் சிலைகளை மும்பை போன்ற வட மாநிலத்திற்கு சென்று பல்வேறு வடிவங்களில் உள்ள விநாயகர் சிலைகளை வாங்கி வந்து, 100 க்கும் மேற்பட்ட இடங்களில் பிரதிஷ்டை செய்வார்கள்.
அடுத்த மாதம் 14 ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வெகு சிறப்பாக கொண்டாட இருப்பதால்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 150 க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 1 அடி முதல் 15 வரை விநாயகர் சிலைகள் தயாரித்து வண்ணம் தீட்டுதல், சிலைகள் தயார் செய்தல் போன்ற பணிகளில் தயாரிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து வினாயகர் சிலை செய்யும் மண்பாண்ட தொழிலாளிகள் கூறுகையில்…..
கடந்த 20 ஆண்டுகளாக விநாயகர் சிலைகளை தயார் செய்து விற்பனை செய்து வருகிறோம். எங்களிடம் 1 அடி உயரம் முதல் 10 அடி உயரம் வரை வினாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. விநாயகர் சிலைகளை தயார் செய்து தமிழகத்தில் தர்மபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலம் வினாயகர் சிலைகளை விற்பனை செய்ய கூடாது என தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால் ஓசூர் மற்றும் மாநில எல்லைகளில் அதிகளவில் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலம் வினாயகர் சிலைகளை செய்து வருகின்றனர்.
ஆனால் நாங்கள் களி மண், அட்டை, கிழங்கு போன்ற அரசு அறிவித்துள்ள இயற்கை பொருட்களை வைத்து சிலைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். கடந்த சில ஆண்டுகளாக பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலம் வினாயகர் சிலைகள் அதிகளவில் செய்யப்பட்டு உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கும் அனுப்பட்டு வருவதாலஉள்ளூர் சிலை தயாரிப்பாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக தெரிரிவித்தனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு 5000 சிலைகளை தயாரித்து, ஏற்றுமதி செய்த நிலையில் தற்போது ஆண்டுக்கு 2000 சிலைகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக போதிய விற்பனை இல்லாததால் பழைய சிலைகள் அப்படியே வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது 50% பணிகள் முடங்கியுள்ளது.
ஆகையால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பறிமுதல் செய்தாலும் உரிய நடவடிக்கை எடுத்து பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலம் வினாயகர் சிலை தயாரிப்புகளை முற்றிலும் தடை செய்து தமிழகர்களின் பாரம்பரிய பண்டிகை என்பதால் அரசு வினாயகர் சிலை தயாரிக்கும் பணியாளர்களுக்கு மானியம் மற்றும் நிவராணம் வழங்க வேண்டும் என விநாயகர் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
