கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வரலாற்று நாயகன் பாரத ரத்னா அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் 85 வது பிறந்த நாளினை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உற்சாகமாக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் 82 வது பிறந்தநாள் விழா, சமுக நல்லிணக்க நாளாகக் கொண்டாடப்பட்டது.

கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் பி.சி.சேகர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த நாடு போற்றும் வரலாற்று நாயகன் அமரர் ராஜீவ்காந்தியின் திரு உருவப்படத்திற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பி.சி.சேகர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து சேலம் மண்டல ரயில்வே கோட்ட உறுப்பினர் தளபதி ரகமத்துல்லா, காங்கிரஸ் கட்சியின் எஸ், எஸ்டி துறையின் முன்னாள் மாநில துணை அமைப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி, நகர் மன்ற உறுப்பினர் வினாயகம், மீனவரணி செல்வம், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் அர்னால்டு ரமேஷ், மாவட்ட பொதுச் செயலாளர் அப்சல், மாரியப்பன் குட்டி என்கின்ற விஜயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட தலைவர் நாராயணமூர்த்தி, மாவட்ட பொதுச் செயலாளர் டாக்டர் தகி ஆகியோர் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் அஜித் பாஷா, பிரஸ் சரவணன், ஓ பி சி மாவட்டத் தலைவர் கவியரசன், பன்னீர்செல்வம் இளைஞர் காங்கிரஸ் சக்திவேல், நகரத் துணைத் தலைவர் வெங்கடாசலம், சதாம் உசேன், ஜே கே பாபு, பாண்டுரங்கன், இஸ்மாயில், சங்கர், வெங்கடேசன், ஏழுமலை, சரவணன், முனுசாமி, ரங்கசாமி, முஸ்தாக், சக்தி, கவுண்டர் பூபதி, கார்த்திக், சின்னசாமி , ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் பூபதிராஜன், செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸார் கலந்து கொண்டனர். முடிவில் சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை தலைவர் மூயீன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

மேலும், இதே போல கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட போச்சம்பள்ளி, பர்கூர், மத்தூர், காவேரிப்பட்டினம், ஊத்தங்கரை, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமரர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளினை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் உற்சாகமாக பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடப்பட்டது.

செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed