ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வழக்கறிஞர் சங்கத்திற்கு 2026 - 2027 ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
   
புதிய நிர்வாகிகள் தேர்விற்கு தேர்தல் ஆணையார்களாக ஆர்.முகுந்தன், பி.என்.செந்தில்குமார் தலைமையில், துணை ஆணையர்களாக பி.கேசவன், கே.கே.கண்ணன், எ. என். செந்தில்குமார், வி. இராஜேந்திரன் ஆகியோர்களது முன்னிலையில் நடைபெற்றது.
       
பரமக்குடி வழக்கறிஞர் சங்க தலைவராக வழக்கறிஞர் எஸ். இளமுருகன், செயலாளராக வழக்கறிஞர் ஆர்.கணேசன், வழக்கறிஞர்கள் பொருளாளராக பி. அரவிந்ராஜ், துணைத் தலைவர்கள் துரை.சண்முகம், எம். அங்கையற்கண்ணி ஆகியோரும், இணைச் செயலாளர்களாக ஆர். திருமூர்த்தி , எஸ். ஜீவப் பிரியா ஆகியோரும் , நிர்வாகக் குழு உறுப்பினர்களாக எம். சேதுபாண்டியன், என். இளங்கோவன், டி. சௌமியநாராயணன், ஜி. ஜானகிராமன், எ.ஜெயக்குமார், எஸ். இராமகிருஷ்ணன், எம். இரவிச்சந்திரன், பி.கேசவன், எஸ். சுரேஷ், ஜி.நிர்மலா, எஸ். நாகராணி, ஆர். ராம்ஜி, என். தவம் பெற்றவள், பி. அர்ஜுன் குமார் ஆகியோர்கள் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதிகளிடம் வாழ்த்து பெற்றனர்.

புதிய நிர்வாகிகளை வழக்கறிஞர்கள், நகர் முக்கிய பிரமுகர்கள், பல்வேறு அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் என பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்த வண்ணமாய் உள்ளனர்.

மாமுஜெயக்குமார்,
மாவட்ட செய்தியாளர்
/ எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed