கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், கருக்கன்சாவடியில் அமைந்துள்ள ரிச்மான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 80 வது சுதந்திர தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது அதில் பள்ளி நிறுவனர் கு. மாதேசன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். விழாவுக்கு பள்ளி தாளாளர் மா. பிரபு முன்னிலை வகித்தார்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இந்திய ராணுவ வீரர்கள் கேப்டன் தேவராஜ் மற்றும் அவுல்தர் ஜெகதீசன் அவர்கள் கலந்து கொண்டு நமது தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்கள் மற்றும் மாணவர்களுக்கு சுதந்திரத்தை பற்றியும் ராணுவத்தில் உள்ள செயல்பாடுகள் பற்றியும் எடுத்துரைத்தார்கள்.

தமிழ் ஆசிரியர் முருகேசன் அவர்கள் தலைமையில் மாணவர்கள் அணிவகுப்பு செய்தனர். தொடர்ந்து பள்ளி குழந்தைகள் நடன நிகழ்ச்சி, மாறுவேட போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் பிரமிட், ஓவியப்போட்டி நடத்தி அதில் சிறப்பாக செய்தவர்களுக்கு சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புகள் வழங்கி இனிதே விழா நிறைவு பெற்றது. விழா நிறைவில் பள்ளி முதல்வர் மதிப்புறு முனைவர் இ.ரவிந்தர் நன்றியுரை கூறினார்.

செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed