ராமநாதபுரம் மாவட்டம் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற 80-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக சமாதான புறாக்களை பறக்கவிட்டார். சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். தொடர்ந்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் , சிறப்பாக பணியாற்றிய 79 காவல்துறை அலுவலர்கள் , பல்வேறு அரசுத்துறைகளை சார்ந்த 487 அலுவலர்கள் என மொத்தம் 566 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

அதனை தொடர்ந்து , வருவாய் , பேரிடர் மேலாண்மை துறை மூலம் 1 பயனாளிக்கு விபத்து நிவாரணமாக 2 லட்சம் ரூபாயும், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 2 பயனாளிகளுக்கு இயற்கை மரணம் , சமக்கிரியா உதவித்தொகையாக 70 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 1 பயனாளிக்கு திரிசைக்கிள் 14,490 ரூபாயும், 1 பயனாளிக்கு காதுகருவி 8 ஆயிரம் ரூபாயும், 2 பயனாளிகளுக்கு எம்ஆர் கிட் 12,264 ரூபாயும், 1 பயனாளிக்கு காதொலி கருவி 3,285 ரூபாயும், 2 பயனாளிகளுக்கு செல்போன்/தையல் இயந்திரம் , கைத்தறி 5,460 ரூபாயும் வழங்கப்பட்டது.

வேளாண்மை , உழவர் நலத்துறை மூலம் 6 பயனாளிகளுக்கு மாவட்ட அளவிலான மயில் விளைச்சல் போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கு 65 ஆயிரம் ரூபாயும், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் 3 மிகச்சிறந்த வங்கியாளர்களுக்கு கௌரவத்துடன் நற்சான்றிதழ் , 30 ஆயிரம் ரூபாயும், தொழிலாளர் நலத்துறை மூலம் 7 பயனாளிகளுக்கு தொழிலாளர் நல வாரிய ஒதுக்கீடாக 1 லட்சத்து 800 ரூபாயும், குடிநீர் வழங்கல் துறை மூலம் 27 பயனாளிகளுக்கு மக்கள் வீடு கட்டும் உதவித்தொகையாக 27 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது.

மொத்தம் 53 பயனாளிகளுக்கு 32 லட்சத்து 9 ஆயிரத்து 299 ரூபாய் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து , அரசு மேல்நிலைப்பள்ளி ஆர்.எஸ்.மங்கலம், அரசு உயர்நிலைப்பள்ளி இளங்குடிசேரி, செயின்ட் ஆன்ட்ரூஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி , ராமநாதபுரம், விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்துப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி , ராமநாதபுரம் அரசு கலைக்கல்லூரி , பரமக்குடி அரசு கலைக்கல்லூரி , நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை, இளம் செஞ்சிலுவைச் சங்கம், சாரண சாரணியர் இயக்கம் என மொத்தம் 831 மாணவர் – மாணவியர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பொதுமக்கள் ஏராளமானோர் பார்வையிட்டனர்.
நிகழ்வில் , ராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் என்.மணிவண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்திஷ் வளர்ச்சி கூடுதல் ஆட்சியர் திவ்யான்ஷூநிகம், மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி , மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கர நாராயணன், செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சி.சாலி தளபதி உள்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், மாணவர், மாணவியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார் .
மாவட்ட செய்தியாளர்.

