
தமிழ்நாடு அளவில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறை அதிகாரிகள், காவலர்கள் 665 பேருக்கு பதக்கங்களை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் வழங்கி கௌரவித்தார்.
சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில், தமிழ்நாடு காவல்துறை சார்பில் நடைபெற்ற விழாவில், காவல்துறையில் 2024, 2025 ஆண்டுகளில் சிறப்பாக பணியாற்றி சேவை புரிந்த, 665 காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவரின் காவல் பதக்கங்கள், மற்றும் மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கங்கள், தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் போன்ற பதக்கங்களை முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கி பாராட்டி கௌரவித்தார்.

ஏற்கனவே, செங்குன்றம் காவல் ஆய்வாளராக பணியாற்றி கொண்டிருக்கும் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு, ஜனாதிபதி பதக்கத்தை பெற தேர்வு பெற்றிருந்தார். அதன் அடிப்படையில், அந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் செங்குன்றம் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு ஜனாதிபதி பதக்கத்தை வழங்கி பாராட்டினார்.
அப்போது காவல்துறை டிஜிபி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உடனிருந்து வாழ்த்து பெற்ற ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.மேலும், அவர் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உட்பட அவர் ஏற்கனவே பணியாற்றிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

எதிரொலி.இன் / 8939476777
