காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோயிலில், பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா இன்று சிறப்புத் தரிசனம் மேற்கொண்டார். சுவாமி தரிசனத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசு மற்றும் திமுக நிர்வாகத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

​தமிழக அரசு சமீபத்தில் தாக்கல் செய்த பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் ஆகிய இரண்டையும் விமர்சித்த அவர், இவை இரண்டும் எவ்விதப் பயனும் இல்லாத ‘வேஸ்ட் பட்ஜெட்’ எனத் தெரிவித்தார்.

ஒன்றும் தெரியாதவர்கள் பட்ஜெட் போட்டால் என்ன ஆகும்? அதைத்தான் இன்று தமிழக மக்கள் அனுபவித்து வருகிறார்கள். இந்த இரண்டு பட்ஜெட்களுமே முற்றிலும் வீணானது.”

தொடர்ந்து கோயில் சொத்துக்கள் மற்றும் அறநிலையத்துறை தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

கோயில் நிலங்களை அபகரிப்பவர்களைச் சிறையில் அடைப்பதோடு, கடும் தண்டனை வழங்கும் அளவுக்குச் சட்டங்களைக் கொண்டு வர வேண்டும். கோயில் நிலங்களைத் தொடுவதற்குக்கூட அனைவரும் அச்சப்படும் நிலை உருவாக்கப்பட வேண்டும்.”

அமைச்சர் சேகர் பாபு கோயில் நிகழ்வுகளில் பங்கேற்பது குறித்தும், அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டம் குறித்தும் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அரசியலில் ‘ஆ, ஆவன்னா’ கூடத் தெரியாதவர்கள் கூட்டும் கூட்டத்தைப் பற்றி நாம் பேசுவதே நேர விரயம் என தனது பாணியில் காரசாரமாகப் பதிலளித்தார்.

​கோயில் நில ஆக்கிரமிப்பு மற்றும் பட்ஜெட் விவகாரங்கள் பற்றி எச். ராஜா அவர்கள் அளித்த இந்த அதிரடி பேட்டி, பெரும் சலசலப்பை கிளப்பியுள்ளது.

செய்திகள் ; லஷ்மிகாந்தன் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed