விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மகேந்திரன் என்பவர் சம்பளத்துடன் கூடிய சேமிப்பு கணக்கை துவக்கி அதை செயல்படுத்தி வந்தார். அவர் மரணம் அடைந்து விட்டார்‌. அவரது குடும்பத்திற்கான இழப்பீட்டுத் தொகை ரூபாய் ஒரு கோடி வங்கி சார்பில் வழங்கப்பட்டது.

வங்கியில் வட்ட தலைவர் ராஜீவ் குமார் சின்ஹா தலைமையில் துணை வட்ட தலைவர் திருச்சி எம் நந்தகுமார் முன்னிலையில் ராஜபாளையம் கிளை மேலாளர் எம் ஆனந்தகுமார் வரவேற்று பேசினார். ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை இறந்தவரின் மனைவிக்கு வழங்கப்பட்டது. வாடிக்கையாளர் சார்பில் முத்துமாணிக்கம் பேசினார்.

முடிவில் வங்கி அலுவலகத்தில் சுமதி நன்றி கூறினார் ஏராளமான வாடிக்கையாளர்கள் விழாவில் பங்கேற்றனர்.

செய்திகள் ; ராமகிருஷ்ணனின் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed