கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி மைதானத்தில், 32 வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக, நாய் கண்காட்சி நடைபெற்றது.

இக்கண்காட்சியில் பல்வேறு இடங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து அரிதான நாய் இனங்களான டால்மேஷன், ஜம்கோர்சா, கிரேட்டேன், லேபர்டார், கோல்டன் ரிட்ரைவர், ஜெர்மன் செப்பாட்டு, ராட்வீலர், கோல்டன் ரெபரிவர், ராஜபாளையம், சிப்பிபாறை, கோம்பை, புள்ளிகுட்டா போன்ற 33 வகையான 172 நாய்கள் பங்குபெற்றன.

இதில் கலந்துகொண்ட நாய்களில் Over All Championship பட்டத்தை வெளிநாட்டு இனங்களில் ஜோலார்பேட்டை சேர்ந்த அருள் உதயராஜ் என்பரின் பெல்ஜீயம் மெலிநோய்ஸ் என்ற நாயினமும், வரட்டனப்பள்ளி சேர்ந்த சூரத் என்பரின் சிப்பிப்பாறை, நாட்டு நாயினமும், பப்பி வைகையில் ராகவேந்திரன், குணசேகரன் ஆகியோரின் நாயினத்திற்கும் பரிசு கோப்பை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

மேலும் இப்போட்டியில் கலந்துக்கொண்ட அனைந்து வகை நாயினகளுக்கு கேடயம், பாராட்டு சான்றிதல்கள் மற்றும் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது. சென்னை கால்நடை மருத்துவ கல்லுாரி மருத்துவர் மரு.சரத் நடுவராக செயல்பட்டு பரிசு பெறும் நாயினங்களை தேர்வு செய்தார். தொடர்ந்து கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் பரிசு கோப்பைகள் மற்றும் பாராட்டு சான்றிதகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர்கள் மரு. மகேந்திரன், மரு.ரமேஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு.மோகன், மற்றும் கால் நடை மருத்துவர்கள் மரு.சாமிநாதன், மரு.ராஜ், மரு.வேலன், மரு.அன்பரசு, மரு.அகில்ராஜ், மரு. அகிலா, மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், பராமரிப்பு உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed