மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 27வது வார்டு பந்தல்குடி பகுதியில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை என கூறி சுமார் நூற்றுக்கும் அதிகமான ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் செல்லூர் மற்றும் யானைகள் பாலம் இரக்கம் சந்திப்பில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிம்மக்கல் கலைஞர் சிலை பகுதியில் இருந்து தத்தனேரி வரையிலும் போக்குவரத்து முற்றிலும் பாதித்தது.


இதனால், காலையில் பள்ளி கல்லூரிக்கு செல்பவர்களும் மற்றும் வேலைக்கு செல்வார்களும் கடும் அவதிக்கு உள்ளானார்கள். மேலும், இதில் அவசரகால உறுதி ஒன்று மாட்டிக் கொண்டது. போலீசார் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி போராட்டக்காரர்கள் ஆம்புலன்ஸ் செல்வதற்கு வழி விட்டு ஒதுங்கி நின்றனர்.


பின்னர், மீண்டும் மறியலில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள் சுமார் 45 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பள்ளி கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் அவதிக்கு உள்ளானது. அப்பகுதி மக்கள் கூறுவது எங்களுக்கு அடிப்படை வசதியான குடிநீர் கழிவுநீர் கலந்து வருவதாகவும் கொசுத்தொல்லை மற்றும் துர்நாற்றம் அதிகம் வீசுவதாகவும் இது குறித்து பலமுறை அதிகாரியிடம் புகார் கொடுத்தும் அலட்சியத்துடன் மாநகராட்சி அதிகாரிகள் செயல்படுவதாகும் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.


இந்த சாலை மறியலால் 45 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த செல்லூர் போலீசார் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாலு தாய் மற்றும் போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டன.


செய்திகள் ; காளமேகம் / எதிரொலி / 8939476777
