கிருஷ்ணகிரி மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் கட்டுமான பொறியாளர் சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான இறகு பந்து போட்டி மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டி துவங்கியது.
இப்போட்டியில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், சேலம், ஈரோடு என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மாநில அளவில் நடத்தப்பட்ட இந்த இறகுபந்து போட்டியை சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட எஸ்.கே. தொழில் குழுமத்தின் தலைவர் ஆசிரியர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து ஒற்றையர் மற்றும் இரட்டையர், கலப்பு இரட்டையர் என பல்வேறு பிரிவுகளில் நடந்தப்பட்ட இப்போட்டியில் வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் விளையாடி வருகிறனர். நாக் அவுட் முறையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெற்றிப் பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்கி சிறப்பிக்கப்பட உள்ளனர்.

இரண்டு நாங்கள் நடைபெறும் இந்த மாநில அளவிலான இறகு பந்துபோட்டியில் வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர்.
செய்திகள் ; மாருதி மனோ / எதிரொலி / 8939476777
