தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் 21/9/2026 திங்கட்கிழமை காலை, கிருஷ்ணகிரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்க கூட்டு அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவர் தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ் தலைமை வகித்தார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் எம் ஆர் கஜேந்திரன், தேசிய குழு உறுப்பினர் நாகேந்திரன், முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் மனோகரன், முன்னாள் மாவட்ட தலைவர் தேவ் பாலமுருகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்திற்கு வந்திருந்த பத்திரிக்கையாளர்களை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் நசீர் அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ், கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த பொழுது சங்க செயல்பாடுகள் சிறப்பாக இருந்தது, அப்போதைய மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையிலான ஒருங்கிணைந்த மாவட்ட பொறுப்பாளர்கள் சிறப்பாக செயல்பட்டு மாநில மாநாட்டை சிறப்பாக நடத்தினர். அதுபோன்ற சிறப்பு மாநாடு இன்று வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறவில்லை. தற்போதைய கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர்கள் சிறப்பாக செயல்பட்டு உறுப்பினர் சேர்க்கை, உறுப்பினர் புதுப்பித்தல் போன்ற பணிகள் சிறப்பாக நடைபெற்றது.

நிர்வாக காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தை கிழக்கு ,மேற்கு என்று பிரித்து செயல்பட்டதிலிருந்து சிறிது காலம் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு பதிவாளர் சங்கத்தின் கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள், கொரோனா தொற்று நோய்க்கு பின் மாவட்ட நிர்வாகிகளின் செயல்பாடு குறைந்துவிட்டது என்றும் அதற்கான காரணங்களையும் மாநில தலைவர் டி.எஸ். ஆர். சுபாஷ் விரிவாக எடுத்துரைத்து ஆலோசனைகளை வழங்கினார்.

மாவட்ட, மாநில நிர்வாகிகளின் ஆலோசனைப்படி கிருஷ்ணகிரி மாவட்டம் கிழக்கு, மேற்கு என்று செயல்படலாம் என்றும் அதன் பொறுப்பாளர்கள் கீழ்க்கண்டவாறு செயல்படுவார்கள் என்றும் அவருடைய செயல்பாடுகள் 40 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை, உறுப்பினர் புதுப்பித்தல் ,தாலுகா அளவிலான உறுப்பினர்களின் பட்டியலை தயாரித்து மாநில நிர்வாகத்திற்கு வழங்க வேண்டும் என்றும் அப்படி செயல்படும் மாவட்ட நிர்வாகிகளை தேசிய குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் கண்காணித்து செயல்படுத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் கேட்டுக்கொண்டார்.

அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய குழு உறுப்பினர்களாக ஓசூர் நாகேந்திரன், ஓசூர் தேவ் பாலமுருகன் ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநில நிர்வாக குழு உறுப்பினராக ‘ஊத்தங்கரை” எம். ஆர். கஜேந்திரன், “ஓசூர்” E. V. பழனியப்பன் ஆகியோரும், மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக போச்சம்பள்ளி மனோகரன், ராயக்கோட்டை முருகேசன் ஆகியோர் செயல்படுவார்கள் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்களாக கிருஷ்ணகிரி மாருதி மனோகரன் தலைவராகவும், ஊத்தங்கரை கே. பழனி செயலாளராகவும், போச்சம்பள்ளி கணேசன் பொருளாளராகவும், ஊத்தங்கரை ஹரிபுத்திரன் மாவட்ட துணைத் தலைவராகவும், ஊத்தங்கரை ஜெகநாதன் மாவட்ட துணை செயலாளர் ஆகவும், கிருஷ்ணகிரி பாஸ்கரன் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆகவும் செயல்படுவார்கள் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொறுப்பாளர்களாக ஓசூர் நசீர் அஹமது தலைவராகவும், பொருளாளராக ஜி. மஞ்சுநாத் ,துணைத் தலைவராக சரவணன் ,துணை செயலாளராக ஜேசுராஜ் , மாவட்ட செய்தி தொடர்பாளராக முரளி ஆகியோர் செயல்படுவார்கள் என்றும், மாவட்ட செயலாளரை நிர்வாகிகள் ஆலோசித்து அறிவிக்கப்படுவார்கள் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விரைவில் சென்னையில், நடக்க இருக்கும் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் 35 வது ஆண்டு விழா மாநாடு சிறப்பாக செயல்பட கிருஷ்ணகிரி கிழக்கு ,மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் சிறப்பாக செயல்படுவோம் என்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிருஷ்ணகிரி மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தந்து ஆலோசனை வழங்கிய மாநில தலைவர் டி எஸ் ஆர் சுபாஷ் அவர்களுக்கு கூட்டத்தில் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட சிறப்பாக செயல்பட அனைத்து மாவட்ட ,மாநில நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் எவ்வித கால் புணர்ச்சியும் இன்றி செயல்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் மாநிலத் தலைவர் டி எஸ் ஆர் சுபாஷ் கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் மாருதி மனோகரன், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் நசீர் ஆகியோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். கூட்டத்தின் முடிவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் கே.பழனி அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed