திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு 4-வது வார்டு திருவள்ளுவர் தெருவில் வசித்துவரும் சங்கர், ஜெகன் ஆகிய இரு குடும்பத்தினரின் 4-மாடுகள் கடந்த ஆண்டு 07.09.2025 அன்று காற்று மழையில் நந்தியம்பாக்கம் (கற்பகபாள்) பகுதியில் மின்சார கம்பி (ஒயர்) அறுந்து கீழே விழுந்து கிடந்திருக்கிறது அதை அறியாமல் அப்பகுதியில் மேய்ச்சலுக்காக சென்ற மாடுகள் மின்சாரம் பாய்ந்து பலியாயின.

அந்த மின்சார விபத்தில் மாடுகளை இழந்த இரண்டு குடும்பத்தினரும் பெரிய அளவில் இழப்பை எதிர்கொண்டனர். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதியுதவி பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில், சென்னை சட்டக்கல்லூரி மாணவரான அத்திப்பட்டு மனோஜ் என்பவர் தானாக முன்வந்து, தமிழ்நாடு மின்வாரிய துறை நிர்வாகத்தின் மீது வழக்கு தொடுத்து அதன் மூலம் அரசாங்கத்திடம் இருந்து இரு குடும்பத்தார்க்கும் தலா 50 ஆயிரம் என ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி தொகை பெற்றுக் கொடுத்தார்.


மின்வாரிய நிர்வாகத்தின் மீது வழக்கு தொடுத்த இந்த சட்டக் கல்லூரி மாணவர் மனோஜ் மாடுகளை இழந்து பாதிக்கப்பட்டு இருந்த குடும்பத்தார் இடமிருந்து ஒரு ரூபாய் கூட கட்டணமாக பெறாமல் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிதி உதவியை பெற்றுத் தந்த சமூக ஆர்வலரும் சட்டக்கல்லூரி மாணவருமான, அத்திப்பட்டு எ.மனோஜ் அவர்களுக்கு கிராமத்தின் சார்பாக, நன்றியும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது.

செய்தியாளர் ; பழவை முத்து /எதிரொலி / 8939476777
