கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள சாமான பள்ளியில் கடந்த 48 வருடங்களுக்கு முன்பு அப்பகுதியில் குடியிருந்து வரும் ஆதிதிராவிடர் என மக்களுக்கு இந்திரா நினைவு குடியிருப்பு வீடுகள் கட்டிகள் கொடுக்கப்பட்டுள்ளது,
ஆனால் அவர்கள் குடியிருந்து வரும் வீடுகள் மிகவும் பழுதடைந்து நிலையில் உள்ளதால் வேறு வீடுகள் கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது . இது தொடர்பாக அந்த வீடுகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆதி திராவிட நலத்துறை அலுவலர் ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் எஸ்,சி, எஸ்.டி.விரிவு மாநிலச் செயலாளர் மூர்த்தி தலைமையில் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் இன மக்ளுடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் அவர்களிடம் கடந்த 48 ஆண்டுகளுக்கு மேலாக இந்திரா நினைவு குடியிருப்புகளுக்கு இலவச பட்டா வழங்க முன்வர வேண்டும் என வலியுறுத்தி நினைவூட்டும் மனுவினை கொடுத்தார்.

பின்னர் இது குறித்து பேசிய மாநில செயலாளர் மூர்த்தி சாமனப்பள்ளியில் தமிழக அரசால் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது . வீடு கட்டி கொடுத்து 48 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை அந்த வீடுகளுக்கான வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. தற்போது வீடுகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதால் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.
ஆகையால் 48 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் இவர்களுக்கு உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியாவது ஆதிதிராவிட இன மக்களுக்கு இலவச பட்டா வணங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி . இன் / 8939476777
