திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதி சுற்றுலா மற்றும் மீன் இறங்குதளம் உள்ள பகுதியாகும். இங்கு மீன்பிடித் தொழில் பிரதானமாக உள்ள நிலையில் பழவேற்காடு லைட் ஹவுஸ் மேம்பாலம் அருகே புதிய மீன் மார்க்கெட் அமைக்கப்பட்டு மேலும் சில புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.


இந்நிலையில், இப்பகுதியில் ஏற்கனவே இருந்த பழைய மீன் மார்க்கெட் கவனிப்பாரற்று அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளதால், கட்டிடம் சிதிலடைந்து மரச் செடிகள் வளருகின்றன. இதனால் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு எந்நேரமும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. மேலும், இந்த மீன் மார்க்கெட் பகுதிக்குள் குப்பை குளங்கள் அதிகம் சேர்வதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.


தற்போது மழை பெய்து வரும் சூழலில் மழைநீர் தேங்குவதால் கொசு உற்பத்தி மற்றும் பல்வேறு தொற்று நோய்களை உருவாக்கக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி எந்நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனை உடனே மீன்வளத்துறை அதிகாரிகள் கவனித்து இதனை முறையாக பராமரித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்திகள் : பழவை முத்து / எதிரொலி . இன் / 8939476777

