பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைத்தின் சார்பில் மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டி நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கத்திலிருந்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக நடைபெற்ற இந்த மிதிவண்டி போட்டியை வருவாய் கோட்டாட்சியர் கிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இந்தப் போட்டியில் ஆண்களுக்கு 2O கிலோ மீட்டர் தூரமும், பெண்களுக்கு 15 கிலோ மீட்டர் தூரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதில் பள்ளி கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் மிதிவண்டி போட்டியில் கலந்துக் கொண்டனர்.

மேலும் குறிப்பிட்ட போட்டி தூரத்தை விரைவாக கடந்து முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5000 ம், இரண்டாம் பரிசாக ரூ 3000-ம், மூன்றாம் பரிசாக ரூ.2000 என பல்வேறு பரிசுகளும் சன்றிதழ்களும் வழங்கி பாராட்டப்பட்டது.

அப்போது மாவட்ட விளையாட்டு அலுவலர் நடராஜமுருகன், அலுவலக உதவியாளர் மார்க்கண்டேயன், உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.

செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed