ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று மாலையில் கனமழை பெய்தது. இந்நிலையில் மலையடிவார பகுதியில் உள்ள அத்திக்கோவில் கருப்பசாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் தாய் மகன் சென்றுள்ளனர். கோவிலுக்கு செல்ல அத்திக்கோவில் ஆற்றை கடந்த போது குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே வந்துள்ளது,
பின்னர் சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பியபோது கனமழையால் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏட்பட்டதால் இருசக்கர வாகனத்துடன் ஆற்றைக் கடக்க முடியாமல் தவித்த தாய் மகனை அங்கிருந்த இளைஞர்கள் சிலர் பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகள் : தேவதர்ஷினி / எதிரொலி . இன் / 8939476777
