இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில், ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் ‘மூக்குத்தி அம்மன் 2’.இப்படத்தின் விளம்பரப் பணிகளின் ஒரு பகுதியாக,
காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் உள்ள வேல்ஸ் தியேட்டர் வளாகத்தில் நயன்தாராவுக்காக பிரம்மாண்டமான 60 அடி உயர கட் அவுட் அவரது ரசிகர்கள் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு மட்டுமே இதுபோன்ற ராட்சத கட் அவுட்கள் வைக்கப்படும்.

இந்நிலையில், தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு நடிகைக்கு இவ்வளவு பிரம்மாண்டமான உயரத்தில் கட் அவுட் அமைக்கப்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இது நயன்தாராவின் மார்க்கெட் மற்றும் அவரது ரசிகர்களிடையே உள்ள வரவேற்பை மீண்டும் நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சுமார் 100 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கட் அவுட் நிறுவப்பட்டு குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட அவரது ரசிகர்கள் மூக்குத்தி அம்மனுக்கு தீபாராதனை காட்டும் போது திடீரென தீப ஆராதனை காட்டிய பெண்ணுக்கு அருள் வந்து ஆடியது சூழ்ந்து இருந்தவர்களை மெய்சிலிர்க்க செய்தது.

செய்திகள் : லக்ஷ்மிகாந்தன் / எதிரொலி . இன் / 8939476777
