கிருஷ்ணகிரியில் கர்ம வீரர் காமராஜர் அணைகள் மற்றும் பள்ளி கூடங்களை கட்டினார். அவர் கட்டிய கிருஷ்ணகிரி அணையால் 40 ஆயிம் ஏக்கர் விளை நிலங்கள் மூலமாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். நீண்ட நாட்களாக அந்த அணையின் முன்பாக காமராஜர் சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து நிலவி வருகிறது. அந்த கோரிக்கையை இந்த மாநாடு மூலமாக முதல்வர் விஜய் அவர்களுக்கு வைப்பதாக கூறினார். அண்ணாமலை பேச்சு.

இதில் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்…. தமிழகத்தில் மது விற்பனையால் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால் குடும்பமே வளர்ச்சி இன்றி பின்னுக்கு செல்கின்றனர். இதனால் பெண்களுக்கு தாரகை அமைப்பு என்ற சுய உதவிக் குழுக்களை மாவட்டம் தோறும் ஏற்படுத்தி அவர்களுக்கு வேலை வாய்ப்பு, வங்கி கடனுதவி, பொருளாதார முன்னேற்றம் கொண்டு வந்து அவர்களை அரசியலில் ஈடுபடுத்தி தலைவர்களாக கொண்டு வருவதே வீ தி லீடர் அமைப்பின் நோக்கமாகும்.


இது படிப்படியாக செயல்படுத்தி தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறோம். எந்த அரசியல் அமைப்பாக இருந்தாலும் மது விலக்கு, பெண்கள் முன்னேற்றம் கொண்டு வர முயற்சிக்கும் எந்த அரசுக்கும் எங்க அமைப்பு ஆதரவை கொடுக்கும். கர்ம வீரர் காமராஜர் அனைகளையும் பள்ளி கூடங்களை கட்டினார். அவர் கட்டிய கிருஷ்ணகிரி அணையால் 40 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் மூலமாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். நீண்ட நாட்களாக அந்த அணையின் முன்பாக காமராஜர் சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து நிலவி வருகிறது. அந்த கோரிக்கையை இந்த மாநாடு மூலமாக முதல்வர் விஜய் அவர்களுக்கு வைப்பதாக கூறினார்.

மேலும் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு தருவீர்களா என்று கேட்கிறார்கள். நிச்சயம் தரமாட்டோம். எந்த அரசு தவறு செய்தாலும் நாங்கள் தட்டி கேட்போம். நல்லது செய்தால் நிச்சயம் பாராட்டுவோம். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வகையில் 8 லட்சம் நபர்களுக்கு பயிற்சி கொடுத்து தயார்படுத்தி வருகிறோம். அருகில் உள்ள கர்நாடக மாநில மக்களும் தமிழக மக்களும் ஒற்றுமையுடன் இரண்டு மாநிலங்களிலும் வளர வேண்டும்.

அப்போது தான் இந்தியா அளவில் மக்களின் வளர்ச்சி சமமாக கிடைக்கும். அனைவரும் பல மொழிகளை கற்க வேண்டும். இது வேலை வாய்ப்புகளை எங்கு சென்றாலும் பெற முடியும். எனவே அனைவரும் தங்களது பிள்ளைகளுக்கு பல மொழிகளை கற்க வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நரசிம்மன் உள்ளிட்ட ஏராளமனவர்கள் கலந்துகொண்டனர்.

செய்திகள் மாருதி மனோ / எதிரொலி . இன் / 8939476777
