உலக காயம் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பெருமளவிலான விபத்து மேலாண்மை மாதிரி ஒத்திகை (Mass Casualty Incident – MCI Mock Drill) கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 22.10.2026, வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில் நடைபெற்றது.

இம்மாதிரி ஒத்திகையானது, பெருமளவிலான விபத்துகள் மற்றும் பேரிடர் காலங்களில் அவசரநிலையை எதிர்கொள்வதற்கான தயார்நிலையை மதிப்பீடு செய்தல், பேரிடர் மீட்புப் பணிகளின் செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் பல்வேறு துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்டத்தின் (TNHSP) வழிகாட்டுதலின்படி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார், இ.ஆ.ப., அவர்கள் தலைமை தாங்கினார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் சத்தியபாமா அவர்கள் முன்னிலை வகித்தார்.

இந்த மாதிரி ஒத்திகையில் உருவகப்படுத்தப்பட்ட விபத்து மற்றும் அவசரநிலைச் சூழல், மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் மருத்துவர் சந்திரசேகர் மற்றும் உறைவிட மருத்துவ அலுவலர் மருத்துவர் செல்வராஜ் ஆகியோரின் ஒருங்கிணைப்பிலும் வழிகாட்டுதலிலும், பல்வேறு துறைகளின் கூட்டு முயற்சியுடன் செயல்படுத்தப்பட்டது.

மருத்துவர் எஸ். மகேஷ் ராம் அவர்களின் மேற்பார்வையில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக் குழுவினர் இம்மாதிரி ஒத்திகையில் முக்கியப் பங்காற்றினர். மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், காவல்துறையினர், மருத்துவக் குழுவினர், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவைக் குழுவினர் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் ஒருங்கிணைந்து பங்கேற்றனர்.

ஒத்திகையின்போது, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக மீட்பது, அவர்களின் காயங்களின் தீவிரத்திற்கேற்ப முன்னுரிமை அடிப்படையில் வகைப்படுத்துவது (Triage), உடனடி மருத்துவ உதவி வழங்குவது, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் உரிய மருத்துவச் சிகிச்சை அளிப்பது போன்ற செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. மேலும், மருத்துவமனையின் பல்வேறு துறைகள், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் சேவைக் குழுவினருக்கிடையேயான தகவல் தொடர்பு, ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவையும் மதிப்பீடு செய்யப்பட்டன.

இத்தகைய மாதிரி ஒத்திகைகள், பெருமளவிலான விபத்துகள் மற்றும் பேரிடர்களின்போது உயிரிழப்புகளைக் குறைப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான மற்றும் தரமான மருத்துவச் சேவைகளை வழங்குவதற்கும், அவசரகால மீட்புக் குழுக்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் மிகவும் அவசியமானவை.

தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்டத்தின் (TNHSP) வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்நிகழ்ச்சி, மாவட்ட நிர்வாகம், மருத்துவமனை நிர்வாகம், அவசர சிகிச்சைப் பிரிவு, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், காவல்துறையினர், 108 ஆம்புலன்ஸ் சேவைக் குழுவினர், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் ஒருங்கிணைந்த பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றது.

மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.க. சத்யபாமா, மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு சி.சந்திரசேகர் உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் மரு.எம் செல்வராஜ்,விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு பேராசிரியர் மருத்துவர் மகேஷ்ராம், பொது மருத்துவ பிரிவு பேராசிரியர் மரு. மாரிமுத்து, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் ஆனந்தகுமார், மரு.ராஜசேகர், எலும்பியல் பிரிவு மருத்துவர் மரு செந்தில், அறுவை சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் மரு. மாலதி, மரு சந்தோஷ்குமார் உள்ளிட்ட மருத்துவ பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் நிர்வாக அலுவலர்கள் S.K. சரவணன், ஜி.சி. சக்திவேல், இளநிலை நிர்வாக அலுவலர் திருமதி.க. சுமதி, செவிலியர் கண்காணிப்பாளர் அனிதா ,

கிருஷ்ணகிரி தாலுகா வருவாய் வட்டாட்சியர், மாவட்ட தீயணைப்பு அலுவலர் மா .வேலு தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்சித்துறை அலுவலர்கள், பணியாளர்கள், குருபரப்பள்ளி காவல் ஆய்வாளர் திருமதி பத்மாவதி அவர்கள் தலைமையிலான காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் குருபரப்பள்ளி காவல் திருமதி.பத்மாவதி, அவர்கள் உள்ளிட்ட மருத்துவர்கள் மருத்துவ மாணவர்கள் செவிலியர்கள் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு பணியாளர்கள், கிரிஸ்டல் பணியாளர்கள் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

செய்திகள் : மாருதி மாணவன் எதிரொலி

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed