வாழ்த்து தெரிவித்த திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்றத்தினர்!

திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கத்தின் தலைவராக, தமிழக அரசின் முன்னாள் வீட்டு வசதித் துறை அமைச்சர் நல்லுசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் தமிழர் மரபுகளைப் பாதுகாத்து வளர்க்கும் நோக்கில் செயல்பட்டு வரும் திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கம், நகரின் தமிழ்ச் சமூக வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த பல ஆண்டுகளாகத் தமிழறிஞர்கள், இலக்கிய ஆளுமைகள் மற்றும் சமூகத் தலைவர்களுடன் இணைந்து தமிழ்ப்பணிகளை முன்னெடுத்து வரும் இச்சங்கம், திருச்சியின் அறிவுசார் மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் அடையாளமாகத் திகழ்கிறது.

இத்தகைய சிறப்புமிக்க தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் பொறுப்பேற்றுள்ள , தமிழக அரசின் முன்னாள் வீட்டு வசதித் துறை அமைச்சராகப் பணியாற்றிய நல்லுசாமி அவர்களை திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்றத் தலைவர் தமிழ்ச்செம்மல் வீ.கோவிந்தசாமி, செயலர் இரா.ஜெயலட்சுமி, துணைத் தலைவர் லட்சுமி நந்தகுமார், ஒருங்கிணைப்பாளர் லால்குடி த.முருகானந்தம், இணைச் செயலர் பெ.விஜயகுமார், துணைச்செயலாளர் அ.வைகுண்ட மூர்த்தி, ஆலோசகர்கள் கேத்தரின் ஆரோக்கியசாமி, முனைவர் சு.செயலாபதி, கவிஞர் க.மாரிமுத்து, பா.முகமது சபி, செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.எஸ்.கேசவன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

செய்திகள் : விஜயகுமார் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed