ராஜபாளையம் அம்மன் பொட்டல் தெருவில் வசிப்பவர் ராமர் (வயது 65) இவரது மனைவி அழகம்மாள் (வயது 60) இவர்கள் இரண்டு பேரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் ராக்காச்சி அம்மன் கோவில் கிழக்கு பகுதியில் தங்களுக்கு சொந்தமான மாந்தோப்பில் குடிசை போட்டு அங்கேயே தங்கி விவசாய பணிகளை செய்து வந்தனர்.
சம்பவத்தன்று கணவன் மனைவி இருவரும் அங்கே இருந்தபோது அடையாளம் தெரியாத இரண்டு பேர் அங்கு வந்து ராமரையும் அழகம்மாவையும் தாக்கி விட்டு அவர்கள் வைத்திருந்த செல்போனை பிடுங்கிக் கொண்டு ஓடி விட்டனர். தாக்குதலில் காயமடைந்த கணவன் மனைவி இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து மம்சாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து இச்ச சம்பவத்தில் ஈடுபட்டதாக மம்சாபுரம் பொன்னுச்சாமி தேவர் தெருவை சேர்ந்த சித்தநாதன் (வயது 31) என்பவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள் : தேவதர்ஷினி / எதிரொலி . இன் / 8939476777
