தேசிய வில்வித்தைப் போட்டிக்கு குயிக் ஸ்பாரோ அகாடமி மாணவி தேர்வு, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ – மாணவிகள், பயிற்சியாளர்கள் , உறவினர்கள் மற்றும் சுற்றத்தார் என அனைவரும் மாணவிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்தவர் சிராஜுதீன், இவர் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள, பாட்டியா கோக் அண்ட் எனர்ஜி என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மகள், தவ்ஷிகா தஸ்னீம் (வயது 15) என்பவர் அதே பகுதியில் இயங்கி வரக்கூடிய, மதன் லால் கெமனி என்ற தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.

தற்போது மாணவி, 33-வது NTPC சீனியர் இந்தியன் ரவுண்ட் தேசிய வில்வித்தைப் போட்டியில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் நவம்பர் 11 முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில், தேசிய அளவில் தனது திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பை மாணவி பெற்றுள்ளார்.

திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற வில்வித்தைப் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டதன் மூலம், தனது கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் தொடர் பயிற்சியின் பயனாக இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.
மாணவியின் இந்தத் தேர்வு அகாடமிக்கும், கும்மிடிப்பூண்டி பகுதிக்கும் பெருமை சேர்த்துள்ளது. மாணவியின் வெற்றிக்குப் பயிற்சியாளர் C. கோபாலகிருஷ்ணன் அவர்களின் வழிகாட்டுதலும் பயிற்சியும் முக்கியப் பங்காற்றியுள்ளன.

தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ள மாணவி தவ்ஷிகா தஸ்னீம் மேலும் பல வெற்றிகளைப் பெற்று சாதனைகள் படைக்க வேண்டும் என அகாடமியின் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. குயிக் ஸ்பாரோ ஸ்போர்ட்ஸ் அகாடமி
பயிற்சியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் சமூக ஆர்வலர்களும் மாணவிக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

செய்திகள் : S.E. யாகோப் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed