மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள ‘குமரன் கோல்டன் ஃபார்ம்’ இயற்கை பண்ணையில், பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு வேளாண் அகப்பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில் பாலமேடு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
இவர்களுடன் காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மாணவிகளும் வேளாண் அகப்பயிற்சியில் இணைந்தனர்.

பயிற்சி முகாமில், வேளாண் ஆர்வலரும் முன்னோடி விவசாயியுமான வாடிப்பட்டி. அசோக் குமார் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு நவீன வேளாண் மேலாண்மை மற்றும் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து ஆலோசனைகளையும் விழிப்புணர்வையும் மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து
அழிந்து வரும் பாரம்பரிய நாட்டின மரங்கள், மருத்துவக் குணம் கொண்ட செடிகள், மா, கொய்யா, உள்ளிட்ட எண்ணற்ற மரங்களை நட்டு பராமரிக்கும் முறைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் பழங்கள் மரங்கள் மருத்துவ குணம் கொண்ட மரங்கள் குறித்தும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது இதில் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.

செய்திகள் / காளமேகம் / எதிரொலி. . இன் / 9939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed