நாடு முழுவதும் முழுவதும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜைகள் வெகு விமர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இது வீடுகள் மட்டும் இன்றி தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், கடைகள் மற்றும் பள்ளி நிறுவனங்களில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜைகள் நடைபெற்று வருகிறது.





இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி அருகே அமைந்துள்ள ராஜீவ் காந்தி இன்டர்னேஷ்னல் பள்ளியில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது
பள்ளி நிறுவனத்தலைவர் வி.வி.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த பூஜையின் போது கல்வி, கலை, இசை, ஞானத்திற்கான அறிவையும் கற்க, கல்வியை கொடுத்ததற்கு நன்றி சொல்லும் விதமாக மாணவர்கள் புத்தகங்கள், பேனா, நோட்டு, இசைக் கருவிகள்,

கணினி போன்ற கல்விக்கு பயன்படும் பொருட்களை அடுக்கி வைத்து பூ, சந்தனம், குங்குமம் வைத்து பூஜைகள் செய்து வழிபட்டதோடு கல்வி அறிவு வழங்கும் சரஸ்வதி தேவிக்கு நன்றி தெரிவித்து பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த விழாவின் போது வாகனங்கள் மட்டுமின்றி கட்டுமான உபகரணங்களுக்கும் பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

செய்திகள் மாருதி மனோ எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed