தமிழ்நாட்டில் மைசூருக்கு அடுத்தபடியாக தசரா திருவிழா மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் இடம் குலசேகரன்பட்டினம் ஆகும். இத்திருவிழாவின் முக்கிய அம்சமே பக்தர்கள் நேர்த்திக்கடனாகப் போடும் பல்வேறு வேடங்கள் தான்.
பக்தர்கள் காளி, சிவன், விஷ்ணு, விநாயகர், அனுமன், அரசன், அரசி, போலீஸ் மற்றும் பல்வேறு அம்மன் வேடங்களை அணிந்துள்ளனர்.
குறிப்பாக, காளியம்மன் வேடம் அணிபவர்கள் கடுமையான விரத முறைகளைப் பின்பற்றி இந்த வேடத்தை ஏற்கின்றனர்.

ஊர் ஊராக செல்லுதல். வேடமணிந்த பக்தர்கள் தங்களது ஊர்களில் உள்ள மக்களிடம் காணிக்கை (தசரா தர்மம்) பெற்றுக்கொண்டு, பின்னர் குழுக்களாக இணைந்து “ஓம் காளி, ஜெய் காளி” என்ற கோஷங்களுடன் குலசை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.
செய்திகள் : சுரேஷ் / எதிரொலி. இன் / 8939476777
