மாங்காடு அருகே கொழுமணிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் விக்கி இவர் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்தார். விக்கியின் நண்பர் யுவனேஷ் என்பவர் விக்கியின் காதலி செல்போனுக்கு மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக விக்கி மற்றும் அவரது மற்றொரு நண்பர் பார்த்திபன் என்பவனுடன் யுவனேசை அழைத்து கொழுமணிவாக்கம் பகுதியில் உள்ள காலி மைதானத்தில் பேச்சுவார்த்தை செய்துள்ளனர்.

ஆத்திரமடைந்த விக்கி மற்றும் பார்த்திபன் யுவனேஷ்யை மது பாட்டில் மற்றும் கல்லை கொண்டு தாக்கி கொலை செய்துள்ளனர் யுவனேஷ்யின் உடலில் கருங்கல்லை கட்டி அருகே இருந்த கிணற்றில் வீசி உள்ளனர். பதட்டம் அடைந்த விக்கி மற்றும் பார்த்திபன் மாங்காடு காவல் நிலையத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்துள்ளனர்.

அதிர்ச்சியடைந்த போலீசார் பூந்தமல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து யுவனேஷ் யின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விக்கி மற்றும் பார்த்திபனை கைது செய்த நிலையில் கொலையில் வேறு யாரேனும் உதவி செய்தார்களா என்ற கோணத்தில் மேலும் ஆறு பேரிடம் மாங்காடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


செய்திகள் : லக்ஷ்மிகாந்தன் / எதிரொலி . இன் / 8939476777
