வத்திராயிருப்பில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்த 2 சிறுவர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இது பற்றிய விபரமாவது…
வத்திராயிருப்பு சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் மகாராஜபுரம் சாலையில் நேற்று முன்தினம் மாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே
ஒரே பைக்கில் வந்த 3 பேரை
நிறுத்தி பெயர், ஊர் விபரங்களை கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்து அவர்களது பைக்கை சோதனை செய்ததில் ஒரு கவரில் 18 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்களை உடனடியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிச்சென்ற போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவ்விசாரணையில், மேற்படி நபர்கள் வத்திராயிருப்பு மறவர் வடக்கு தெருவை சேர்ந்த செந்தில்குமார் மகன் கவிராஜன்(19) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 18, மற்றும் 17 வயது உடைய 2 சிறுவர்கள் என தெரிய வந்தது. வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டுகளை தயார் செய்து கொண்டு சென்றதாக பிடிபட்ட நபர்கள் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து 18 நாட்டு வெடி குண்டுகளை பறிமுதல் செய்த போலீஸார், மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா, நாட்டு வெடிகுண்டுகள் தயார் செய்வதற்கான வெடிமருந்து எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் வத்திராயிருப்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகள் ; தேவதர்ஷினி / எதிரொலி . இன் / 8939476777
