மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் சுமார் 5,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கக்கூடிய நிலையில் ஊராட்சியில் இளங் காளியம்மன் கோவில் எதிரில் உள்ள துணை சுகாதார நிலையத்திற்கு நிரந்தர மருத்துவ பணியாளர் இல்லாத நிலையில் மருத்துவ உதவிக்காக மேலக்கால் சோழவந்தான் மன்னாடிமங்கலம் போன்ற பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

இந்த துணை சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த பணியாளர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற நிலையில் தற்போது வரை நிரந்தர பணியாளர் நியமிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. நிரந்தர பணியாளர் இல்லாத நிலையில் பல நேரங்களில் துணை சுகாதார நிலையம் பூட்டியே கிடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். சுமார் 5,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கக்கூடிய இந்த ஊராட்சியில் அடிப்படை மருத்துவ உதவிக்காக அருகில் உள்ள சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கும் மற்றும் ஐந்து கிலோ மீட்டர் தூரம் உள்ள மன்னாடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் எட்டு கிலோமீட்டர் தூரம் உள்ள மேலக்கால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

wபொதுமக்களின் சிரமங்களை குறைக்கவும் மருத்துவ உதவி விரைந்து கிடைப்பதற்கும் உடனடியாக நிரந்தர மருத்துவ பணியாளரை நியமிக்க வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன்
