தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் 35 வது ஆண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட சங்கமும், வேல்ஸ் மருத்துவ மனை மற்றும் மருத்துவ கல்லூரியும் இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம், மற்றும் கண் சிகிச்சை முகாம், நடைபெற்றது.

அதற்கான ஏற்பாடுகளை, கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் மற்றும் கிராம ஊராட்சிகளின் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ் பாபு ஆகியோரின் ஆலோசனையின் பேரில், புதுகும்முடிபூண்டி ஊராட்சி மன்றத்தின் சார்பில், ஊராட்சி செயலாளர் சிட்டிபாபு செய்திருந்தார்.

அந்த முகாமில், புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் முகாமிற்கு வந்திருந்து பரிசோதனைகள் செய்து கொண்டதுடன், சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகளை பெற்றனர்.
கண் சிகிச்சை முகாமில் இலவச கண் பரிசோதனை அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான மேல்பரிந்துறை நடைபெற்றது.

இந்த முகாமில், கண் பரிசோதனை செய்து கொண்டவர்களில் சிலர் கண் அறுவை சிகிச்சை செய்வதற்காக வேல்ஸ் மருத்துவமனை நிர்வாகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டனர். அதன்படி, அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளனர். மேலும், மருத்துவ முகாமில் ரத்தப் பரிசோதனை, சர்க்கரை வியாதி பரிசோதனை, உள்ளிட்ட பரிசோதனைகள் நடைபெற்றது.

வேல்ஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை துணைவேந்தர் டாக்டர் நாராயணசாமி அவர்களின் ஆலோசனை பேரில், முகாமுக்கு வந்திருந்த மருத்துவர்கள், ஸ்ரீதர், ரீசல் சித்தார்த், சொர்ணா, சுகன், சங்கர், லீனா ஸ்ரீ போன்ற மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் முகமைக்கு வந்திருந்த மக்களுக்கு பரிசோதனைகளை செய்ததுடன் வெற்றிகளையும் வழங்கினார்.

மேலும், கிராமப்புற பகுதியில் வேல்ஸ் மருத்துவமனை செய்து வரும் சேவைகள் குறித்தும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு மாதந்தோறும் இலவச பரிசோதனைகள் மற்றும் கட்டணமில்லாமல் ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுவது குறித்தும், பின்னர் இலவச பிரசவ சிகிச்சை அளிப்பதுடன், வேல்ஸ் மருத்துவமனையில் குழந்தை பெற்று வீடு திரும்பும் தாய்மார்களுக்கு 10,000 ரூபாய் மதிப்புள்ள பரிசு பெட்டகமும் வழங்கப்படுகிறது, போன்ற விவரங்களை எடுத்துரைத்தனர். மருத்துவர்களுக்கு உதவியாக, செவிலியர்கள் திவ்யா, மதுமிதா, பியூலா, பென்சி, ஆகியோர் இருந்து பணியாற்றினர்.

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின், தேசிய குழு உறுப்பினர், பாலகிருஷ்ணன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் மில்டன், செயலாளர் அருள், பொருளாளர் யாக்கோபு, செய்தி தொடர்பாளர் முத்து, சாமிநாதன், ஜான் பிரான்சிஸ், ஆகியோர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர்.

செய்திகள் : S.E.யாகோப் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed